Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. ஐபி64 ரேட்டிங்.. புது Realme போன் ரெடி..

ரியல்மி நிறுவனம் அடுத்து ரியல்மி சி75 5ஜி (Realme C75 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவரும். இந்நிலையில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி75 5ஜி அம்சங்கள் (Realme C75 5G Specifications): 6000mAh பேட்டரி உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சிங்கிள் சார்ஜில் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அதிருது இந்திய மார்க்கெட்.. புது Realme போன் ரெடி.. எந்த மாடல்?

4ஜி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) ஆதரவு கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பிரைட்னஸ், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort mode) மற்றும் பல அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்நைட் லில்லி (Midnight Lily), பர்பிள் ப்ளாசம் (Purple Blossom) மற்றும் லில்லி ஒயிட் (Lily White) நிறங்களில் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) ஆதரவு இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15 OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதிருது இந்திய மார்க்கெட்.. புது Realme போன் ரெடி.. எந்த மாடல்?

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் ரியல்மி சி75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி75 5ஜி போன் ரூ.12,999 விலையிலும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ரியல்மி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C75 5G design and specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X