ஆர்டர் அள்ள போகுது.. கம்மி பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. புது Realme 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் இன்று (ஜூன் 2) புதிய ரியல்மி சி73 5ஜி (realme C73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் டைமன்சிட்டி சிப்செட், 6000எம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி சி73 5ஜி அம்சங்கள் (realme C73 5G Specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன்ஸ டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
32எம்பி ரியர் கேமரா (GALAXYCORE GC32E2) வசதியுடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது இந்த ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker) ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
தரமான MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி. டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ்இ க்ளோனாஸ், கலிலியோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி போனில் உள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் +128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,499-ஆக உள்ளது. ஜேட் கிரீன் (Jade Green), கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








