Home
Mobile

ஜூன் 2 உறுதி.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் ஜூன் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில கசிந்த இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி சி73 5ஜி அம்சங்கள் (Realme C73 5G Specifications): 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) ஆதரவு கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பிரைட்னஸ், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort mode) மற்றும் பல அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஜூன் 2 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

கிரிஸ்டல் பர்பிள் (Crystal Purple), ஜேட் கிரீன் (Jade Green), ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) நிறங்களில் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

அதன்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

குறிப்பாக IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) ஆதரவு இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சிங்கிள் சார்ஜில் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி சி73 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் கம்மி பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C73 5G India launch Date, specifications reveled online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X