Home
Mobile

பிச்சிக்கிட்டு போகுது ஆர்டர்.. ரூ.7,949 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி சி71 (Realme C71) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், IP54 ரேட்டிங், யுனிசோக் சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.8,699 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 18 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், யுபிஐ பரிவர்த்தனைக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,949 பட்ஜெட்டில் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பிச்சிக்கிட்டு போகுது ஆர்டர்.. ரூ.7,949 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி!

ரியல்மி சி71 அம்சங்கள் (Realme C71 Specifications): ஆக்டா கோர் 12என்எம் யுனிசோக் டி7250 ஜிபியு (Octa Core 12nm UNISOC T7250) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது.

6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் வாங்க கிடைக்கிறது. இந்த ஐபிஎஸ் டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்படுகிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாருடன் 13 எம்பி மெயின் கேமரா (4160 x 3120 பிக்சல்கள்) வருகிறது. இந்த கேமராவில் போட்டோ மோட், வீடியோ மோட், நைட் மோட், போர்ட்ராய்டு மோட், ஹைப்பர்டெக்ஸ்ட் மோட் மற்றும் டூயல் வியூ வீடியோ மோட் பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் எஸ்சி5220சிஎஸ் (SC520CS) சென்சார் கிடைக்கிறது. இதிலும் போட்டோ மோட், வீடியோ மோட், போர்ட்ராய்டு மோட் மற்றும் நைட் மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரியுடன் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

மிலிட்டரி கிரேடு டிராப் ரெசிஸ்டன்ஸ் (Military-grade Drop Resistance) கிடைக்கிறது. இதுபோக ஆர்மோர்ஷெல் (ArmorShell) டிஸ்பிளே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 8011 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) ஆகிய கனக்டிவிட்டிகளை கொடுக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. 7.94 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை கிடைக்கிறது. பேக் பேனலில் பல்ஸ் லைட் கிடைக்கிறது. இதில் கஸ்டமைசபிள் எபெக்ட்கள் கிடைக்கின்றன. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் சீ ப்ளூ (Sea Blue) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C71 With 6300mAh Battery Available at 20 Percent Discount on Flipkart Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X