Home
Mobile

சைலெண்டா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.7,390 ஆஃபர் விலைக்கு Realme போன்.. 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

இந்தியாவில் மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை கொடுக்கும் ரியல்மி நிறுவனமானது, அடிமட்ட விலைக்கு ரியல்மி சி71 (Realme C71) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக கிடைக்காத விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ரியல்மி சி71 போனின் தள்ளுபடி விவரங்களை இப்போது பார்க்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 13 சதவீத தள்ளுபடி போக ரூ.7,779ஆக இருக்கிறது. இந்த விலையில் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.389 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.7,390 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டுக்கு 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

சைலெண்டா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.7,390 ஆஃபர் விலைக்கு Realme போன்!

ரியல்மி சி71 அம்சங்கள் (Realme C71 Specifications): 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. மேலும், 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது.

தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த ரியல்மி சி71 போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுத்துள்ளது. இதில் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் ஏஐ இமேஜ் மேட்டிங் (AI Image Matting) போன்ற கேமரா பீச்சர்களை வருகிறது. மேலும், ஏஐ கால் நாய்ஸ் ரெடக்சன் 2.0 (AI Call Noise Reduction 2.0) போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த ரியல்மி சி71 போன் கொண்டுள்ளது.

இதில் ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சார் வருகிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதில் எஸ்சி5220சிஎஸ் (SC520CS) சென்சார் கிடைத்துள்ளது. ஏஐ பீச்சர்கள் போக வழக்கமாக கிடைக்கும் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), டூயல் வியூ வீடியோ (Dual View Video) ஆகியவை கொண்டுள்ளது.

இந்த ரியல்மி சி71 போனுக்கு 6300mAh பேட்டரி கிடைத்துள்ளது. இந்த பேட்டரியில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்து கொள்ளலாம். மேலும், 6W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்துள்ளது. டியூரபிலிட்டியை பொறுத்தவரையில், இந்த போனுக்கு ஆர்மோர்ஷெல் (ArmorShell) பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது.

எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் தரத்துக்கு கிடைக்கும் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷனை கொடுத்துள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுத்துள்ளது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) & சீ ப்ளூ (Sea Blue) கலர்கள் உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 8011 (Wi-Fi 802) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C71 With 4GB RAM 6300mAh Battey Discount in India Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X