தீபாவளி இன்னும் முடியல.. ரூ.6,830 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 15W பாஸ்ட் சார்ஜிங்.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ரியல்மி சி71 (Realme C71) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் சென்சார் கேமரா, IP54 ரேட்டிங், 2 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் சிப்செட் கொண்ட இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,699ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,699ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி வேரியண்ட் ரூ.7,190 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.360 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,830 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

அதேபோல 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.7,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கு ரூ.375 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.7,124 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.5,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சரகளை பார்க்கலாம்.
ரியல்மி சி71 அம்சங்கள் (Realme C71 Specification): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 563 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது.
இதுபோக 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் டி7250 ஜிபியு (Octa Core UNISOC T7250 12nm) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 64 ஜிபி, 128 ஜிபி மட்டுமல்லாமல், இதில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி பயன்படுத்தலாம்.

லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது. இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனுக்கு ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. ஆகவே, 1.8 மீட்டர் டிராப் ரெசிஸ்டன்ட், 33 கிலோ பிரஷர் ரெசிஸ்டன்ட் போன்ற டியூரபிலிட்டி கிடைக்கிறது.
இது மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் 6300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 6W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரி இருந்தும் ஓரளவுக்கு ஸ்லிம் லுக் கொடுக்கும்படி 7.94 எம்எம் தடிமன் உள்ளது.
அதேபோல 201 கிராம் எடை வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா, ஓம்னிவிஷன் ஓவி13பி (Omnivision OV13B) சென்சாருடன் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ரியல்மியில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. அப்சிடியன் பிளாக், சீ ப்ளூ கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








