புது ரியல்மி போன் அறிமுகம்.. 6300mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி சி71 (Realme C71) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி கேமரா, 6300mAh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய ரியல்மி சி71 போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி சி71 அம்சங்கள் (Realme C71 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 725 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் (octa-core Unisoc T7250 chipset) வசதி இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதி ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6300mAh பேட்டரி உடன் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 4ஜி, ஜிபிஎஸ், வைஃபை, புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும்.
ரியல்மி சி71 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.10,000 என தகவல் வெளியாகி உள்ளது. பிளாக் நைட் ஆவ்ல் ( Black Night Owl) மற்றும் ஸ்வான் ஒயிட் (Swan White) நிறங்களில் இந்த புதிய ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








