இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ரூ.7,699 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. புது ரியல்மி போன் அறிமுகம்!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி71 (Realme C71) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6300எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரியல்மி சி71 அம்சங்கள் (Realme C71 Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 563 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டா-கோர் யுனிசாக் டி615 சிப்செட் (octa-core Unisoc T615 chipset) உடன் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்பகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த போனில் இந்த போனில் உள்ளது. 4G, புளூடூத் வி5.2, க்ளோனாஸ் (GLONASS), பெய்டோ (Beidou), வைஃபை 5, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
6300mAh பேட்டரி உடன் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black), சீ ப்ளூ (Sea Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி71 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,699 விலையில் வாங்க முடியும். மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.8,699-ஆக உள்ளது. இன்று முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








