அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. வெறும் ரூ.10,750 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரியல்மி சி53 பிறகு வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரியல்மி சி67 போன் விரைவில் வெளியாகயிருக்கிறது. முன்னதாகவே, இதன் 5ஜி வெர்ஷன் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
ரியல்மி சி67 அம்சங்கள் (Realme C67 Specification): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பன்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) மாடலாகும். இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 685 SoC) சிப்செட் வருகிறது.
அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ யு எடிஷன் (Realme UI U edition) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு 8 ஜிபிக்கானா டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது.
அதேபோல 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது. இந்த போனில் மிரட்டலான டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரியல்மி சி67 போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போனுக்கு IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மியின் பிரத்யேகமான மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இருப்பினும், ஸ்லிம் டிசைனில் 7.9 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய 2 கலர்களில் வெளியாக இருக்கிறது.
இந்த ரியல்மி போன் முதலில் இந்தோனேசியா நாட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. அங்கு இந்த போனில் விலை வெறும் ரூ.10,750 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனின் இந்திய அறிமுகம் ஒரு சில மாதங்களில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஏனென்றால், இந்த போனின் 5ஜி வெர்ஷன் வரும் டிசம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்த வெளியீட்டை ரியல்மி இந்தியா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதோடு சில முக்கிய அம்சங்களையும், டிசைன் மற்றும் கலர் குறித்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளது. இதன் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G Specification): இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் வருகிறது. ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனை போலவே கிரீன் மற்றும் பிளாக் கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் விலையானது, ரூ.12,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








