Home
Mobile

விஸ்வரூப சேல்.. வெறும் ரூ.12,999 போதும்.. 2TB மெமரி.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ரியல்மி பிரியர்களும் பிளிப்கார்ட்டில் குவியும்படி வெறும் ரூ.12,999 பட்ஜெட்டில் AI கேமரா, 8ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.12,999 போதும்.. 2TB மெமரி.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த சி67 போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த போனில் மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே பேனல் வருகிறது. ஆகவே, 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த ரியல்மி சி67 போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஏஐ (AI) கேமரா மாடலாகும். அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்டி சிலாட் மற்றும் நானோ சிம் சிலாட் வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint scanner) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 33W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

அதேபோல யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ரியல்மி சி67 5ஜி போனானது, 190 கிராம் எடை மற்றும் 7.89 மிமீ தடிமன் கொண்டுள்ளது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் வருகிறது.

ரூ.12,999 போதும்.. 2TB மெமரி.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் (Dust & Splash) ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி மாடலில் சன்னி ஒயாசிஸ் (Sunny Oasis) மற்றும் டார்க் பர்பிள் (Dark Purple) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் எர்லி அக்சஸ் சேல் (Early Access Sale) பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இன்று தொடங்கியிருக்கிறது.

இந்த ரியல்மி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டில் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எர்லி அக்சஸ் சேல் சலுகை காரணமாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு ரூ.7,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C67 5G With 8GB RAM, 50MP Camera on Early Access Sale in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X