டிச.14 அதிரும்.. வெறும் ரூ.12,000 பட்ஜெட்ல ULTRA ஸ்லிம்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. எந்த போன்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, டைமன்சிட்டி 6100+ சிப்செட், 5,000mAh பேட்டரி போன்ற மிரளும் அம்சங்களுடன் ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) போன் வெளியாக இருக்கிறது.
ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G Specification): இந்த ரியல்மி போனில் 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ 6என்எம் எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm SoC) சிப்செட் வருகிறது.

அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ14.0 (Realme UI4.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனில் வந்த பேட்டரி அம்சங்களை போலவே இந்த போனிலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. ஸ்லிம் டிசைனில் 7.89 தடிமன் கொண்டிருக்கிறது. அதேபோல ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) மற்றும் நெபுளா பர்பிள் (Nebula Purple) கலர் கொண்டிருக்கிறது.
இந்த ரியல்மி சி67 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ரூ.12,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போனின் மற்ற அம்சங்களானது, ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனை போலவே இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மெமரி மற்றும் ரேம் வேரியண்ட்களில் மட்டுமே வேறுபாடு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனில் 6 ஜிபி ரேம் மட்டுமே ஹை-எண்ட் வேரியண்ட்டாக இருக்கிறது.
ஆகவே, இந்த ரியல்மி சி67 5ஜி போனில் 8 ஜிபி + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போன் வரும் டிசம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்த போனுக்கு பிறகு ரியல்மி சி67 4ஜி (Realme C67 4G) போன் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரியல்மி சி67 4ஜி அம்சங்கள் (Realme C67 4ஜி Specification): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 685 SoC) சிப்செட் வருகிறது. 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வர இருக்கின்றன. இந்த போனில் மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனிலும் 5,000mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்தோனேசியாவில் இந்த போனின் விலை கசிந்துள்ளது. வெறும் ரூ.10,750 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








