Home
Mobile

தெறிக்குது பட்ஜெட்.. வெறும் ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்களை தட்டித்தூக்கும் பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 2டிபி மெமரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பக்காவான டிசைனில் ரியல்மி சி67 5ஜி (Realme C67 5G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G Specifications): இந்த ரியல்மி போனில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி!

இந்த சி67 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ரியல்மி மாடல்களில் வரும் ஸ்ட்ரீட் போட்டோகிராபி பில்டர்கள் மற்றும் நைட் மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன,

8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி சி67 5ஜி வேரியண்ட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் வருகிறது.

மேலும், ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் உள்ளது.

அதோடு 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தலாம். ஆகவே, மைக்ரோ எஸ்டி சிலாட் மற்றும் நானோ சிம் சிலாட் இடம் பெற்றுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.13,499 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி!

இந்த ரியல்மி சி67 5ஜி போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து வெறும் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 7.89 மிமீ தடிமன் கொண்டுள்ளது.

இந்த மாடலில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் (Dust & Splash) ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) ஆகியவற்றின் சப்போர்ட்டும் உள்ளது.

ரியல்மி சி67 5ஜி போனில் சன்னி ஒயாசிஸ் மற்றும் டார்க் பர்பிள் ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்தியாவில் இன்று (டிசம்பர் 14) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (realme.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிகொள்ளலாம்.

இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டில் விலை ரூ.13,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.1000 பிளாட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 பேங்க் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 6 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.13,499க்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C67 5G With 12GB RAM Sale From December 16 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X