Home
Mobile

டிச.14 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. குறைந்த விலையில் Realme போன். எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. குறைந்த விலையில் Realme போன். எந்த மாடல்?

ரியல்மி சி67 5ஜி அம்சங்கள் (Realme C67 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (FHD+ IPS display) வசதியுடன் இந்த ரியல்ம சி57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. குறைந்த விலையில் Realme போன். எந்த மாடல்?

தரமான 6என்எம் டைமன்சிட்டி 6100 பிளஸ் (6nm Dimensity 6100+) சப்செட் வசதியைக் கொண்டு இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு Realme UI4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W Fast charging support) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. குறைந்த விலையில் Realme போன். எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ரியல்மி ஸ்மார்ட்போனின் எடை 200 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த ரியல்மி 67 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி போன் அட்டகாசமான அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C67 5G to launch in India on December 14:check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X