Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,000 போதும்.. புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் ரியல்மி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி சி67 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று தகல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி சி67 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது ரியல்மி சி67 5ஜி ரீடெய்ல் பாக்ஸ் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,௦௦௦ விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் ரியல்மி.. எந்த மாடல்?

தற்போது வரை ரியல்மி சி67 5ஜி போனின் விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை. ஆனாலும் கூடிய விரைவில் இந்த ரியல்மி சி67 5ஜி போனின் விவரக்குறிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் டிசம்பர் 7-ம் தேதி ரியல்மி ஜிடி 5 ப்ரோ போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். மேலும் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ அறிமுகமாகும் மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இருந்தபோதிலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் 1.5கே AMOLEDடிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட், டி.சி. டிம்மிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார்(Sony LYT-T808 sensor) + 50எம்பி டெலிபோட்டோ சென்சார் ( Sony IMX 890) + 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் என்கிற டர்பிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் 120x டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

புதிய 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் ரியல்மி.. எந்த மாடல்?

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5400 எம்எஎச் பேட்டரியுடன் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக வை-பை 6 (Wi-Fi 6), என்ஃஎப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். மேலும் சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வந்த பிறகு உலக நாடுகள் மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C67 5G retail box leaked online: India launch likely soon: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X