அட்டை காப்பி.. ஆனாலும் விலை கம்மி.. புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Realme.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி சி65 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.
ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், 50எம்பி கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி சி65 அம்சங்கள் (Realme C65 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 720x1,604 பிக்சல்ஸ், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) வசதியுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85 SoC) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி சி65 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி சி65 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் இந்த ரியல்மி சி65 போனின் வலது பக்கத்தில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)வசதியுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் எஸ்22 சீரிஸ் (samsung galaxy s22 series) ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி65 போன்.
புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வியட்நாமில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை VND 3,690,000 (இந்திய மதிப்பில் ரூ.12,000)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications