Home
Mobile

அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

சீன நிறுவனமான ரியல்மி தனது ரியல்மி சி65 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கூட தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

குறிப்பாக சாம்சங் எஸ்22 சீரிஸ் (samsung galaxy s22 series) ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன். மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் வயலட் (Violet) மற்றும் கேலக்ஸி பிளாக் (Galaxy Black) நிறங்களில் ரியல்மி சி65 போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி!

ரியல்மி சி65 அம்சங்கள் (Realme C65 specifications): வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் இந்த ரியல்மி சி65 போனின் வலது பக்கத்தில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் பின்புற பேனல் பளபளப்பான பூச்சு கொண்டது.

5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) வசதியுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ரியல்மி யுஐ 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள (Android 14 OS) வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி!

ரியல்மி சி65 ஸ்மார்ட்போனின் சிப்செட் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

எப்போது அறிமுகம்? வரும் ஏப்ரல் 4-ம் தேதி வியட்நாம் சந்தையில் (Vietnam market) ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C65 will be launched in Vietnam on April 4: check specifications,color
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X