Home
Mobile

மார்க்கெட் அரளுது.. சீன கம்பெனியை மிரட்டிவிட்ட Realme.. ரூ.10,000 விலை.. 6GB RAM + 256GB மெமரி.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் சந்தையையே புரட்டிபோடப் போகும் புதிய போனை ரியல்மி நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த சாதனம் ரூ.10,000 விலைக்குள் 6GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உடன் வரும் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்க போகிறது என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

ரியல்மி (Realme) நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? இதன் விலை என்ன? இந்த போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் மாடல் ரியல்மி C65 என்ற மாடல் பெயருடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வியட்நாம் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மார்க்கெட் அரளுது.. சீன கம்பெனியை மிரட்டிவிட்ட Realme.. ரூ.10,000 விலை

ரூ.10,000 விலைக்குள் மார்க்கெட்டை மிரட்டும் ரியல்மி C65:

ரியல்மி நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலை கொண்ட பட்ஜெட் செக்மென்ட் விருப்பமாக ரியல்மி C சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரியல்மி நிறுவனம் இதற்கு முன்பு ரியல்மி C51 (Realme C51), ரியல்மி C53 (Realme C53) மற்றும் ரியல்மி C55 (Realme C55) போன்ற மாடல்களை வெளியிட்டுள்ளது. இதில் ரியல்மி C51 சாதனம் வெறும் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வந்தது.

அதேபோல், ரியல்மி C55 இந்திய சந்தையில் ரூ. 13,999 விலை வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த வரிசையில் வெளியிடப்பட்ட எந்த ஸ்மார்ட்போன் சாதனத்திலும் ரியல்மி நிறுவனம் 6GB RAM உடன் இணைக்கப்பட்ட 256GB ஸ்டோரேஜ் மாடலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக நிறுவனம் இப்போது 6GB RAM உடன் இணைக்கப்பட்ட 256GB ஸ்டோரேஜ் விருப்பத்தை ரூ. 10,000 விலைக்குள் அறிமுகம் செய்யவுள்ளது.

ரியல்மி நிறுவனத்திடம் இருந்து வாங்க கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஸ்மார்ட்போன் (Realme's cheapest smartphone device 2024) சாதனமாக இந்த ரியல்மி C65 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 4ம் தேதி அறிமுகம் செய்யப்படவிருக்கும் Realme C65 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பற்றி பேசுகையில், இது 6.67" இன்ச் அளவு கொண்ட IPS LCD டிஸ்பிளேவை (display) கொண்டிருக்கும்.

மார்க்கெட் அரளுது.. சீன கம்பெனியை மிரட்டிவிட்ட Realme.. ரூ.10,000 விலை

ரியல்மி C65 டிஸ்பிளே, கேமரா, பேட்டரி அம்சம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை கொண்ட 720p குவாலிட்டி உடைய 625 நீட்ஸ் பீக்-பிரைட்னஸ் டிஸ்பிளேவாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட் செக்மென்ட் ரியல்மி C65 ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ G85 (MediaTek Helio G85) சிப்செட்டை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த மொபைல் சாதனம் 50MP கொண்ட டூயல் கேமரா (camera) அமைப்புடன் வெளிவரும்.

முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8MP செல்பி கேமராவை வழங்கும். பேட்டரி பற்றி பேசுகையில், Realme C65 மொபைல் சாதனம் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த டிவைஸ் 45W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast charging) ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக மைக்ரோ எஸ்டி (microSD) கார்ட் ஸ்லாட் அம்சத்தையும் கொண்டிருக்கும்.

ரியல்மி நிறுவனம் நாளை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் புதிய ரியல்மி 12x 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்கிறது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம் இந்த ரியல்மி C65 சாதனத்தை ரூ.8000 - ரூ.10,000 விலைக்குள் புதிய பட்ஜெட் சாதனமாக அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C65 Launching With 6GB RAM 256GB Storage 50MP Camera 5000mAh Battery Under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X