பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. ஐபி54 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி (realme) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (realme C65 5G discount): 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300) உடன் ரியல்மி சி65 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.
6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு வெளிவந்தது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரியல்மி சி65 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 5000mAh பேட்டரி உடன் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன்.
டைனமிக் பட்டன் மற்றும் ஏர் கெஸ்சர் அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த சாதனம். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications