Home
Mobile

ஆர்டர் மிரளும்.. ரூ.9999 போதும்.. SAMSUNG கேமரா.. 2TB மெமரி.. 15W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.9999 பட்ஜெட்டில் சாம்சங் சென்சார் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 2டிபி மெமரி, 15W சார்ஜ், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G) போன் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (Realme C65 5G Specifications): இந்த ரியல்மி போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 Sensor) வருகிறது. ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்டிருக்கிறது. ஸ்ட்ரீட் போட்டோகிராபி ஃபில்டர்கள் (Stree Photography Fliters) வருகின்றன.

ஆர்டர் மிரளும்.. ரூ.9999 போதும்.. SAMSUNG கேமரா.. 2TB மெமரி மாடல்!

அதேபோல டில்ட்-ஷிப்ட் போட்டோகிராபி ஃபில்டர்கள் (Tilt-shift Photography Fliters) கொண்டிருக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி08டி10 சென்சார் (OmniVision OV08D10 Sensor) கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ரியர் கேமராவிலும் செல்பீ கேமராவிலும் 1080P வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) வருகிறது.

அதோபோல போர்ட்ராய்டு (Portrait), டூயல் வியூ வீடியோ (Dual View Video) சப்போர்ட் உள்ளது. ஆகவே, ரூ.10000 பட்ஜெட்டில் போன்களில் கேமரா பீச்சர்களில் இந்த மாடல் மிரளவிட்டுள்ளது. இந்த ரியல்மி சி65 5ஜி போனில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது.

120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இதுவொரு ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comfort Display) மாடலாகும். கேமராவை போலவே இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது.

ஆர்டர் மிரளும்.. ரூ.9999 போதும்.. SAMSUNG கேமரா.. 2TB மெமரி மாடல்!

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் உடன் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருவதால், மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

இந்த போனில் கேமிங் பிரியர்களுக்காகவே கேமிங் பூஸ்ட் (Gaming Boost) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் + 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி வருகிறது.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) உடன் 5000mAh பேட்டரி வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker) வருகிறது. பட்ஜெட் போன்களில் வரும் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.

இந்த ரியல்மி சி65 5ஜி போனில் ஃபெதர் கிரீன் (Feather Green) மற்றும் குளோவிங் பிளாக் (Glowing Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.10,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது.

அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் மாடல்களுக்கு ரூ.500 டிஸ்கவுண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி (Realme) தளங்களில் இன்று 4 மணிக்கு முதல்கட்ட விற்பனை தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Realme C65 5G With 6GB RAM Launched Under Rs 10000 Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X