Home
Mobile

டூயல் கேமரா.. 128ஜிபி மெமரி.. மலிவு விலையில் புதிய 5ஜி போனை களமிறக்கும் Realme.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ரியல்மி 65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதாவது ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G) ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

மலிவு விலையில் புதிய 5ஜி போனை களமிறக்கும் Realme.. எந்த மாடல்?

அதேபோல் டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.12,000-க்கு கீழ் அறிமுகமாகும். பின்பு இந்த கிரீன் மற்றும் பர்பிள் நிறங்களில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ரியல்மி போன். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் ரியல்மி சி65 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.

மேலும் ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி சி51 (Realme C51) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். 6.7 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி51. மேலும்90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core Unisoc T612 12nm) சிப்செட் கொண்டுள்ளது. மேலும் இதில் மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி51 வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர கேமராவில் நைட் மோட் (Night Mode), பனோராமிக் வியூ (Panoramic view), டைம் லேப்ஸ் (Timelapse), போர்ட்ராய்டு (Portrait Mode), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் எச்டிஆர் (HDR) ஆகியகேமரா அம்சங்கள் இதில் உள்ளது.

மலிவு விலையில் புதிய 5ஜி போனை களமிறக்கும் Realme.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. ஐபோன்களில் வரும் மினி கேப்சூல் (Mini Capsule) என்னும் டைனாமிக் நோட்டிபிகேஷன் (Dynamic Notifications) அம்சம் இந்த ரியல்மி சி51 போனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் பேக் பேனல் ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைனில் (Stylish Glittering Design) வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். பின்பு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ரியல்மி சி51 போன் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C65 5G smartphone will be launched in India soon: check price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X