Home
Mobile

அதிகமா ஆர்டர் விழுது.. அதனால புது கலர்.. கூடவே ரூ.1000 ஆபர்.. பட்ஜெட் விலை 5G போன் மீது Realme செய்த சம்பவம்!

ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில்.. 5ஜி ஆதரவுடன் சேர்த்து சில நல்ல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தால்.. இந்திய வாடிக்கையாளர்களை கவர் செய்துவிடலாம் என்கிற ரியல்மி நிறுவனத்தின் வியாபார தந்திரம் ஆனது பக்காவாக வொர்க்-அவுட் ஆனது ரியல்மி சி65 5ஜி அறிமுகத்தின் போது தான்! ஏற்கனவே நல்ல முறையில் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது புதிய கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது விற்பனை? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ரியல்மி நிறுவனம் அதன் பெஸ்ட் பட்ஜெட்-விலை 5ஜி மாடலான ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய ஸ்பீடி ரெட் கலர் (Realme C65 5G Speedy Red Color) ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன் ஆனது, கடந்த ஏப்ரல் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பெதர் க்ரீன் வேரியண்ட்டில் நாம் பார்த்த அதே டிசைனை பெற்றுள்ளது.

அதிகமா ஆர்டர் விழுது.. அதனால புது கலர்.. கூடவே ரூ.1000 ஆபர்!

ரியல்மி சி65 5ஜி ஸ்பீடி ரெட் வேரியண்ட்டின் விற்பனை ஆனது வருகிற ஜூன் 14 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இ-ஷாப் வழியாக தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த புதிய கலர் ஆப்ஷனை விளம்பரப்படுத்த ரியல்மி நிறுவனமானது ஸ்பீடி ரெட் வேரியண்ட் மீது ரூ.1,000 வரையிலான உடனடி தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.

விலை விவரங்களை பொறுத்தவரை (மேற்குறிப்பிட்ட இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இல்லாமல்) ரியல்மி சி65 5ஜி ஸ்பீடி ரெட் வேரியண்ட்டின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ரூ 10,490 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.11,490 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.12,490 க்கும் வாங்க கிடைக்கும். தகுதி உடையவர்கள் மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் ரூ.1000 தள்ளுபடியை பெறலாம்.

ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1604 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, ரியல்மி சி65 5ஜி ஆனது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300) உடனான ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) மற்றும் 6ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஏஐ-ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது வினாடிக்கு 30 பிரேம்களில் 1080பி வீடியோ பதிவையும் ஆதரிக்கின்றன.

பேட்டரியை பொறுத்தவரை, ரியல்மி சி65 5ஜி ஆனது 15W வயர்டு விரைவான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகளை ஆதரிக்கிறது.

மேலும் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. சுவாரசியமாக இது டைனமிக் பட்டன் மற்றும் ஏர் கெஸ்சர் அம்சங்களையும் கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு ஏர் கெஸ்சர் என்றால் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா வழியாக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை தொடாமலேயே, கை அசைவுகளால் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனை கண்ட்ரோல் செய்ய உதவும் அம்சங்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C65 5G New Speedy Red color Variant Launched in India Offer Price Sale Starts From June 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X