Home
Mobile

முதல 4G.. அடுத்து 5G.. ரூ.10,000 விலையில் வெளுத்து வாங்கும் realme.. வாங்குனா இந்த Mobile தான் வாங்கணும்..

ரியல்மி (realme) நிறுவனம் இந்த மாத துவக்கத்தில் ரியல்மி சி65 4ஜி (realme C65 4G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இப்போது நிறுவனம் புதிதாக இதே மாடலில் 5ஜி (5G) வெர்ஷன் ஸ்மார்ட்போனை 2TB ஸ்டோரேஜ் உடன் களமிறங்கியுள்ளது.

2 வார இடைவெளிக்கு பிறகு, ரியல்மி நிறுவனம் இப்போது ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ரியல்மி டைமென்சிட்டி 6300 (Dimensity 6300) சிப்செட் உடன் அறிமுகம் செய்கிறது. இந்த சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் முதல் சாதனமே ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல 4G.. அடுத்து 5G.. ரூ.10,000 விலையில் வெளுத்து வாங்கும் realme..

ரியல்மி சி65 5ஜி மொபைல் (realme C65 5G Mobile):

ரூ. 10,000 விலை முதல் இந்த ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. வெறும் 10,000 ரூபாய் விலை புள்ளியில், தரமான டிஸ்பிளே (Display), 2TB வரையிலான ஸ்டோரேஜ் (Storage), சக்தி வாய்ந்த புதிய தலைமுறை சிப்செட் (Chipset) என்று பல மிரட்டலான அம்சங்களை ஒரே போனில் வழங்கி வெளுத்துவிட்டிருக்கிறது ரியல்மி.

ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) சாதனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6ஜிபி ரேம் (6GB RAM) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வருகிறது.

இது நிறுவனத்தின் சொந்த ரியல்மி யுஐ 5.0 இயங்குதளத்துடன் அவுட் ஆப் தி பாக்ஸில் இயங்குகிறது. ரியல்மி இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச் உடன் வருகிறது. இந்த ரியல்மி சி65 5ஜி சாதனம் 6.67" இன்ச் எச்டி+ (HD) 120Hz எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 625 பீக் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது.

முதல 4G.. அடுத்து 5G.. ரூ.10,000 விலையில் வெளுத்து வாங்கும் realme..

ரியல்மி சி65 5ஜி விலை மற்றும் விற்பனை விபரம் (realme C65 5G Price and Sale Details):

இந்த ஸ்மார்ட்போன் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்துடன் வருகிறது. இந்த ரியல்மி சி65 5ஜி டிவைஸ் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. பின்பக்கத்தில் LED பிளாஷ் அம்சத்துடன் வருகிறது. இது 5,000mAh கொண்ட பேட்டரி பேக் அப் உடன் 15W சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த போன் IP54 ரேட்டிங் உடன் வருகிறது.

புதிய ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் மைக்ரோஎஸ்டி (microSD) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏர் கேஸ்ட்சர் (Air Gesture), மினி கேப்ஸ்யூல் (Mini Capsule 2.0), டைனமிக் பட்டன் (Dynamic Button) மற்றும் ஏஐ பூஸ்ட் (AI boost), ஸ்மூத் பூஸ்ட் (Smooth boost) மற்றும் கேம் பூஸ்ட் (Game boost) போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது.

இந்த புதிய ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது 4GB/64GB, 4GB/128GB, and 6GB/128GB மூன்று வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இதன் விலை முறையே ரூ.10,499, ரூ. 11,499 மற்றும் ரூ. 12,499 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக விற்பனையாகு வரும் என்று கூறப்பட்டுளது.

Best Mobiles in India

English summary
Realme C65 5G 6GB RAM 128GB Storage 2TB microSD Memory Dimensity 6300 120Hz Display 50MP camera Price India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X