யாரு சாமி அவன்.. ரூ.10000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 2TB மெமரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படி ரூ.10,000 செக்மெண்ட்டில் வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 2டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ரியல்மி சி63 (Realme C63) போன் களமிறங்கி இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொண்ட மாடலாக இது இருக்கிறது. அதேபோல 7.74 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. மேலும், விர்ச்சுவல் ரேம் சப்போர்ட், வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்ஜெட் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள் இதோ.

ரியல்மி சி63 அம்சங்கள் (Realme C63 Specifications): இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. போர்ட்ராய்டு, பியூட்டி செல்பீ மற்றும் ஸ்கிரீன் ஃபில் லைட் போன்ற பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது.
இந்த போனில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட ஐ கம்போர்ட் டிஸ்பிளே (Eye Comfort Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த ரியல்மியில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) வருகிறது. பட்ஜெட் மாடல்களில் வரும் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. கேம் பூஸ்ட் (Game Boost) சப்போர்ட் உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் ஏர் கெஸ்ச்சர் (Air Gestures) வருகிறது. ஆகவே, ஸ்வைப் வீடியோ, கால் அட்டெண்ட், மியூட் கால் போன்றவற்றை ஏர் கெஸ்ச்சர் மூலம் செய்து கொள்ளலாம். அதேபோல டைனாமிக் பட்டன் (Dynamic Button) வருகிறது. இந்த பட்டன் மூலம் பவர் ஆன்/ஆஃப் மட்டுமல்லாமல் கூடுதலாக பலவற்றை செய்துகொள்ளலாம்.
பிங்கர்பிரிண்ட் அன்லாக், பிளாஷ் லைட், மியூட், கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் போன்றவற்றை இதன் மூலம் செய்து கொள்ள முடியும். ஏஐ நாய்ஸ் ரெடக்சன் கால் (AI Noise Reduction Call) சப்போர்ட் உள்ளது. மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சர் வருகிறது. அல்ட்ரா பூம் சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது.
இதுவே பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கிறது. ஆனால், இதுபோக 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) 5000mAh பேட்டரி வருகிறது. வேகன் லெதர் பேனல் கொண்ட லெதர் ப்ளூ (Leather Blue) மற்றும் ஜேட் கிரீன் (Jade Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த ரியல்மி சி63 போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,250ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,785ஆகவும் இருக்கிறது. மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 5ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அதன்பின் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications