வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான கம்மி பட்ஜெட்டில் வேகன் லெதர் பேக் பேனலுடன் ரியல்மி சி63 (Realme C63) மாடலானது வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இப்போது, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா, டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பிளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட்டில் வெளியாகி இருக்கின்றன. இந்த ரியல்மி 63 போனின் விலை எப்படி இருக்கும்? எந்தெந்த பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? எப்போது விற்பனைக்கு வரும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரியல்மி போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. ப்ளூ மற்றும் கிரீன் ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த ப்ளூ வேரியண்ட் பிரீமியம் லெதர் பேக் கொண்டிருக்கிறது. இந்த போன் அடுத்த வாரத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு வர இருக்கிறது.

இந்த பீச்சர்களை மட்டுமே ரியல்மி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதேபோல விலை விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ரியல்மி சி63 போனானது, ஏற்கனவே மலேசியாவில் வெளியாகி விற்பனைக்கு வந்துவிட்டது. இதன் பீச்சர்களே இந்தியாவில் வெளியாகும் மாடலில் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, அதை பார்த்துவிடுவோம்.
ரியல்மி சி63 அம்சங்கள் (Realme C63 Specifications): இந்த ரியல்மியில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.
இருப்பினும், இந்தியாவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வர வாய்ப்புள்ளது. கேம் பூஸ்ட் (Game Boost) சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் வருகிறது. மேலும், ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) வருகிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார்) வருகிறது. போர்ட்ராய்டு பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 6 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம்.
மேலும், ஏர் கெஸ்ச்சர் (Air Gestures), டைனாமிக் பட்டன் (Dynamic Button) மற்றும் மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) போன்ற ஸ்மார்ட் பீச்சர்களும் வருகின்றன. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. லெதர் ப்ளூ மற்றும் ஜேட் கிரீன் கலர்கள் கொண்டுள்ளது.
மலேசியாவில் இந்த சி63 போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,250ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,785ஆகவும் இருக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. வரும் ஜூலை 3ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








