Home
Mobile

ஈயடிச்சான் காப்பி.. ரூ.12,000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது ரியல்மி போன்..

சமீபத்தில் உலக சந்தையில் ரியல்மி சி65 எனும் ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியச் சந்தையில் ரியல்மி சி63 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் RMX3939 என்ற மாடல் நம்பர் உடன் இந்த ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் எஸ்22 சீரிஸ் (samsung galaxy s22 series) ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈயடிச்சான் காப்பி.. இந்தியாவுக்கு வருகிறது ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி63 அம்சங்கள் (Realme C63 specifications): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி63 ஸ்மார்ட்போன். மேலும் 720x1,604 பிக்சல்ஸ், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85 SoC) சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி சி63 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி சி65 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ரியல்மி சி63 ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் 8எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி சி63 ஸ்மார்ட்போன். மேலும் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

குறிப்பாக புளூடூத் 5.3, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் 191 கிராம் எடை கொண்டது இந்த அசத்தலான ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் மாடல்.

ஈயடிச்சான் காப்பி.. இந்தியாவுக்கு வருகிறது ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.12,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் போன்ற வடிவமைப்பைக் கொண்ட ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme C63 gets BIS certification: India launch soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X