பொசுக்குனு பட்ஜெட்.. ரூ.9,999 போதும்.. 32MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை அறக்க பறக்க விடும்படி ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) போன் களமிறங்கி இருக்கிறது. வெறும் ரூ.9,999 ஆரம்ப விலையில் எச்டிபிளஸ் டிஸ்பிளே, 32 எம்பி கேமரா, 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஏற்கனவே, லெதர் பேக் பேனலுடன் ரியல்மி சி63 4ஜி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த மாடல் 5ஜி சிப்செட் உடன் வந்துள்ளது.
ரியல்மி சி63 5ஜி அம்சங்கள் (Realme C63 5G Specifications): இந்த ரியல்மி மாடலானது, பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) மட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொண்டுள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த ரியல்மியில் மூன்று ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது. இந்த எஸ்டி கார்டு சிலாட் உடன் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் வருகிறது.
இந்த ரியல்மி சி63 5ஜி போனில் 32 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) உள்ளது. இந்த ரியல்மி சி63 5ஜி போனில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 10W குயிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்லிம் லுக்கில் 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது.
190 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த ரியல்மி சி63 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த ரியல்மியில் ஸ்டார்ரி கோல்டு (Starry Gold) மற்றும் ஃபரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகவே, வெறும் ரூ.9,999 ஆரம்ப விலையில் இந்த மாடலை வாங்கி கொள்ளளலாம். கம்மியான பட்ஜெட்டில 5ஜி போனை வாங்க திட்டமிட்டவர்களுக்கு இதுவொரு பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








