யாரு சாமி அவன்.. வெறும் ரூ.10,249 பட்ஜெட்ல 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 2TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிமட்ட விலையில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz ரெஃப்ரேஷ் ரேட் டிஸ்பிளே, கேலக்ஸிகோர் மெயின் கேமரா, ஓம்னிவிஷன் செல்பீ கேமரா போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் வந்திருப்பதால், பட்ஜெட் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போட்டு வருகின்றனர். இது போனின் விவரங்கள் இதோ.
ரியல்மி சி63 5ஜி அம்சங்கள் (Realme C63 5G Specifications): இந்த ரியல்மியில் ஐ கம்போர்ட் சப்போர்ட் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் சப்போர்ட் கொண்டிருக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

இதுபோக 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது. 32 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டிலும் போட்டோகிராபி பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, போர்ட்ராய்ட் மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), நைட் மோட் (Night Mode), டில்ட்-ஷிப்ட் (Tilt-Shift), பனோரமா மோட் (Panorama Mode) போன்ற பீச்சர்கள் உள்ளன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமராவில் போர்ட்ராய்டு மோட், நைட்மோட் பீச்சர்களுடன் டூயல் வியூ வீடியோ (Dual-View Video) வருகிறது.
மெயின் கேமராவில் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ1 (Galaxycore GC32E1) சென்சாரும், செல்பீ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08ஏ10 (OMNIVISION OV08A10) சென்சாரும் வருகிறது. பட்ஜெட் போன்களில் வரும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, 5ஜி பேண்ட்களில் நல்ல அவுட்புட் எதிர்பார்க்கலாம். லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மியின் யுஐ 5.0 (Realme UI 5.0) பேக் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 3 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த மாடல்களில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்த முடியும். அதற்கான சிலாட் (Slot) இந்த ரியல்மி சி63 5ஜி போனில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட் போன்களில் வரும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உள்ளது.
இந்த ரியல்மியில் 10W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,750 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த டிஸ்கவுண்ட்டை பெற எச்டிஎப்சி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். ஆகவே, ரூ.10,249 பட்ஜெட்டில் இந்த ரியல்மி சி63 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். ஸ்டார்ரி கோல்டு (Starry Gold) மற்றும் ஃபரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








