Home
Mobile

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 32MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்களுக்கு லட்டு மாதிரி ஆஃபர் வந்திருக்கு என்று சொல்லும்படி 12 ஜிபி ரேம், 32 எம்பி கேமரா, 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இப்போது அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? விலை எப்படி? டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ரியல்மி சி63 5ஜி போனின் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க்கிறது. ஆகவே, ரூ.10,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 32MP கேமரா மாடல்!

ரியல்மி சி63 5ஜி அம்சங்கள் (Realme C63 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஸ்டார்ரி கோல்டு (Starry Gold) மற்றும் ஃபரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. வெறும் 7.94 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. இதுபோக 192 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த பாடி டிசைனிலும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) உள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் பக்கா 5ஜி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இதில் 2 டிபி மெமரிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது. அடிமட்ட விலைக்கு கிடைப்பதால் கேமரா சிஸ்டம் பெரிதாக இல்லை. இருப்பினும், 32 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்துள்ளது. இதுபோக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

மேலும், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. மேலும், IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிரீமியம் லுக் கொண்ட மாடலாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C63 5G With 12GB RAM Sale Under Rs 11000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X