Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரூ.11000 பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களுடன் கொண்ட போன் வாங்க வேண்டுமானால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் கிடைக்கும் ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) போனானது, பக்கா ஆப்ஷனாக இருக்கும். பிரீமியம் லுக்கில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் வாட்டர் டச் டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. ஏஐ பூஸ்ட் என்ஜின் (AI Boost Engine), ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ரியல்மி சி63 5ஜி போனின் முழு பீச்சர்கள், டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி சி63 5ஜி அம்சங்கள் (Realme C63 5G Specifications): இந்த ரியல்மியில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் பட்ஜெட் மாடல்களில் வரும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.11000 பட்ஜெட்ல 12GB ரேம் மாடல்!

6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் ஆர்டருக்கு வருகிறது. இந்த மாடல்களில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது.

இந்த ரியல்மி சி63 5ஜி போனில் 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும். மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவில் பேக் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டைவிட கூடுதலாக ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி போனில் ஏஐ பூஸ்ட் என்ஜின் (AI Boost Engine) உள்ளது. இது மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்க உதவுகிறது. 10W குயிக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியுடன் 7.94 எம்எம் தடிமன் வருகிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி சி63 5ஜி போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 32 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கிடைக்கிறது.

இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.500 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.9050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

ஆக்சிஸ், எச்டிஎப்சி, ஐசிசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற மல்டிபிள் பேங்க் கார்டுக்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி சி63 5ஜி போனை வெறும் ரூ.11,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஸ்டார்ரி கோல்டு (Starry Gold) மற்றும் ஃபரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
realme C63 5G With 12GB RAM Gets 14 Percent Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X