விற்பனை ஆரம்பம்.. ரூ.10,000 பட்ஜெட்டில் 120Hz டிஸ்பிளே, 16GB ரேம், 2TB மெமரி, IP64 ரேட்டிங், 5G.. என்ன மாடல்?
புது போன் வாங்கும் அனைவருமே 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் மாடல்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். "வாங்குறதே வாங்குறீங்க.. 5ஜி சப்போர்ட் உடன் வரும் ஸ்மார்ட்போனை வாங்கிடலாமே!" என்பது தான் எங்களுடைய 'சஜ்ஜஷன்' ஆகவும் இருக்கிறது. எங்களுடைய பரிந்துரையை ஏற்றாலும் கூட, "பட்ஜெட்" உங்களுக்கு ஒரு சிக்கலாக இருந்தால்.. ரூ.10,000 பட்ஜெட்டில் இன்று (ஆகஸ்ட் 20) முதல் விற்பனைக்கு வரும் ரியல்மி சி63 5ஜி (Realme C63 5G) ஸ்மார்ட்போனை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இது விலையை மீறிய பல அம்சங்களோடு சேர்த்து, 5ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.
ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் யாரெல்லாம் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறார்களோ, அவர்கள் தான் இந்திய மொபைல் சந்தையை ஆட்சி செய்யலாம் என்கிற "வியாபார தந்திரத்தின்" கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் - ரியல்மி சி63 5ஜி. இது அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட், 8ஜிபி வரை ரேம், 16ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128ஜிபி வரை ஸ்டோரேஜ், 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) அம்சம் மற்றும் ஐபி64 ரேட்டிங் போன்றவைகளை கொண்டுள்ளது.
ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான Realme UI 5.0 கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 89.97 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.67-இன்ச் HD+ (720x1,604 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் மற்றும் 8ஜிபி வரையிலான ரேம் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேமை "கடன் வாங்கி" 16 ஜிபி வரை விரிவாக்கவும் முடியும். இது மினி கேப்சூல் 2.0 அம்சத்தையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 32-மெகாபிக்சல் ஏஐ-ஆதரவு கொண்ட ப்ரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஃபாரெஸ்ட் கிரீன் மற்றும் ஸ்டாரி கோல்ட் கலர்களில் விற்பனை செய்யப்படும். ரியல்மி சி63 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. இது ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும்.
அறிமுகச் சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.10,999 க்கு பதிலாக ரூ .9999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.11,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.12,999 க்கு பதிலாக ரூ .11,999 க்கும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








