எகிறுது ஆர்டர்.. ஆஃபர்ல ரூ.7000-க்கு வருது.. அடிமட்ட விலைக்கு 50MP கேமரா போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ரியல்மி சி63 4ஜி (Realme C63 4G) போனுக்கு கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. வேகன் லெதர் பேனல், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் சார்ஜிங், பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு பீச்சர்களை இந்த மாடல் கொடுக்கிறது. இப்போது, இந்த ரியல்மி 4ஜி போனுக்கு கொடுக்கப்பட்ட விலை குறைப்பு மற்றும் இதன் பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.8,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.7,636 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.7,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி சி63 4ஜி போனை ரூ.1,363 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம்.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை கொடுக்கிறது? இந்த அடிமட்ட விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதாவது, வேகன் லெதர் பேனலுடன் டூயல் ரியர் கேமரா டிசைனில் கிடைக்கிறது. வாட்டர் டிராப் செல்பீ ஷூட்டருடன் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதுபோக மினி கேப்சூல் பீச்சரும் இந்த போனில் இருக்கிறது.
இதுபோக 4 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த ஐபிஎஸ் (IPS) மாடல் டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ரியல்மி சி63 4ஜி போனில் யுனிசோக் டி612 ஆக்டா கோர் 12என்எம் (UNISOC T612 Octa Core 12nm) ப்ராசஸர் மற்றும் மீடியம் அவுட்புட் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உள்ளது.
கேமராவை பார்க்கையில், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. வாட்டர்-டிராப் நட்ஜில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த செல்பீ ஷூட்டருக்கு பக்கத்தில் மினி கேப்சூல் பீச்சரின் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். இது பிரீமியம் அனுபவம் கொடுக்கும்.
இந்த ரியல்மி போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கூடுதலாக கிடைக்கும் பீச்சராக இருக்கிறது. ஆகவே, ஹை-லைட் பீச்சர்களில் இந்த பேட்டரியும் முக்கியமானதாகும். இதுவொரு பட்ஜெட் மாடலாக இருப்பதால், பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் உள்ளன.
அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) இருக்கிறது. இந்த ரியல்மி போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








