Home
Mobile

சத்தியமா விலை ரூ.8,999 தான்.. ஆனா 45W சார்ஜிங், IP54 ரேட்டிங், லெதர் பினிஷ், 8GB ரேம்.. Realme மிரட்டல்!

சூப்பர்-பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் என்றாலே.. அதாவது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் என்றாலே.. அதில் பெரிய அளவிலான முக்கிய அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் இவைகள் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களாகவே (Entry-level Smartphones) இருக்கும். அதாவது பீஃச்சர் போனில் (Feature Phone) இருந்து முதல் முறையாக ஸ்மார்ட்போனிற்கு 'அப்கிரேட்' ஆகுபவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவைகளாக இருக்கும். ஆனால் ரூ.8999 க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அப்படி இல்லை!

இது 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 4ஜிபி வழக்கமான ரேம் உடன் 8ஜிபி விர்ச்சுவல் ரேம், 50எம்பி ப்ரைமரி கேமரா உடனான டூயல் ரியர் கேமரா செட்டப், லெதர் பினிஷ், ரெயின் வட்டார ஸ்மார்ட் டச் டெக்னாலஜி என "விலையை மீறிய" பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.8999-க்கு 45W சார்ஜிங், IP54 ரேட்டிங், லெதர் பினிஷ், 8GB ரேம்!

நாம் இங்கே பேசுவது ரியல்மி சி63 (Realme C63) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்தியாவில் ரூ.10,000 க்குள் என்கிற பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல், என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பிரிவில் மிகவும் அரிதாகவே பார்க்க முடியும் - 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மற்றும் 6.7-இன்ச் டிஸ்பிளே வையும் கொண்டுள்ளது.

ஹை-எண்ட் பெர்ஃபார்மென்ஸை விட லாங் பேட்டரி லைஃப்-க்கு முன்னுரிமை கொடுக்கும் பேஸிக் ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து ரியல்மி சி63 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனை 1 நிமிடம் சார்ஜ் செய்தால் 1 மணிநேர காலிங் டைம்-ஐ வழங்கும்.

ரூ.8999-க்கு 45W சார்ஜிங், IP54 ரேட்டிங், லெதர் பினிஷ், 8GB ரேம்!

முன்னரே குறிப்பிட்டபடி, இது லெதர் பினிஷ் பேக் பேனலையும் கொண்டுள்ளது. இதுவும் கூட என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பிரிவில் நாம் பார்க்க முடியாத ஒன்றாகும். கேமரா செட்டப்பும் கூட நன்றாக உள்ளது. இது 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது ஆக்டாகோர் யுனிசாக் டி612 (Octa-core Unisoc T612 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி "வழக்கமான" ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் அம்சமும் உள்ளது, இதன் மூலம் மல்டிடாஸ்கிங் அனுபவத்தை இன்னும் மேம்படுத்த இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 4ஜிபி ரேமை கடன்வாங்கி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.

ரூ.8999-க்கு 45W சார்ஜிங், IP54 ரேட்டிங், லெதர் பினிஷ், 8GB ரேம்!

8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வரும் ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, இந்த ஸ்மார்ட்போன் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது மழைக்காலம் அல்லது குளியலறை போன்ற ஈரமான சூழலில் மென்மையான ஸ்மார்ட்போன் பயன்பாட்டை உறுதி செய்யும் என்று ரியல்மி நிறுவனம் கூறுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 90.3 சதவீதம் ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ மற்றும் 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிள் ரேஷியோ உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரூ.8999-க்கு 45W சார்ஜிங், IP54 ரேட்டிங், லெதர் பினிஷ், 8GB ரேம்!

45W பாஸ்ட் சார்ஜிங் திறனை உறுதி செய்த ரியல்மி நிறுவனம், ஸ்மார்ட்போனின் பாக்ஸில் அதற்கான பாஸ்ட் சார்ஜரை இணைக்கிறதா இல்லையா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள், தனியாக 45W சார்ஜரை வாங்க வேண்டிய சூழல் ஏற்பாடாது என்றே நம்புகிறோம். ஏனென்றால் இதுவரையிலாக ரியல்மி பிராண்ட் அதன் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை வழங்குவதை
இன்னும் நிறுத்தவில்லை.

ரியல்மி சி63 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் ஆனது ஒரே ஒரு ஸ்டோரேஜ் ஆப்ஷன் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: அது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இது ரூ.8,999 க்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் ரியல்மி.காம் (Realme.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மெயின்லைன் சேனல்களின் வழியாக விற்பனைக்கு வரும். இது லெதர் ப்ளூ மற்றும் ஜேட் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C63 45W Charging Leather Finish Launched India Price Specifications Sale From July 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X