பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.8000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களும் அறக்க பறக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், மினி கேப்சூல் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்ட ரியல்மி சி61 (Realme C61) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி சி61 போனில் என்னென்ன பீச்சர்கள் வருகிறது? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி என்பதை பார்ப்போம்.
ரியல்மி சி61 போன் அறிமுகமானபோது, இதன் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.900 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.7000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

ஆகவே, இந்த ரியல்மி மாடலை வெறும் ரூ.8099 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த போனில் சபாரி கிரீன் (Safari Green) மற்றும் மார்பிள் பிளாக் (Marble Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேபோல 4 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.
ரியல்மி சி61 அம்சங்கள் (Realme C61 Specifications): இந்த ரியல்மியில் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கும் போன்களில் இந்த மாடல் டாப் லிஸ்டில் உள்ளது. ரியல்மி யுஐ (realme UI) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) சப்போர்ட் உள்ளது. இந்த போனில் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் டெப்த் சென்சார் வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மி சி61 போனில் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎல் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் உள்ளது.
மேலும், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) சப்போர்ட் உள்ளது. டைனாமிக் ரேம் மட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. மேலும், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom Firing Speaker) வருகிறது.
இந்த ரியல்மி சி61 போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும், IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் சப்போர்ட் உள்ளது. இது 4ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








