Home
Mobile

Realme புலி தான்.. ரூ. 7000 விலை.. இது வெறும் போன் இல்லை.. இரும்பு கோட்டை.. அளப்பறையாக வெளிவரும் புது Mobile..

ரியல்மி (Realme) நிறுவனம் இந்தியாவில் ஒரு சூப்பர் ஸ்ட்ராங் ஸ்மார்ட்போன் (Super Strong Smartphone) சாதனத்தை ரூ. 7,000 பட்ஜெட் பிரிவின் (Budget segment) கீழ் அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்தியாவின் மலிவு விலை செக்மென்ட் பிரிவாக இருந்தாலும் கூட, ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ரியல்மி C61 (Realme C61) என்ற ஸ்மார்ட்போன் சாதனம் மெட்டாலிக் ஃபிரேம் (Metalic frame) அம்சத்துடன், உறுதியான பாடி (Body), ஆர்மர் ஷெல் பாதுகாப்பு (Armour shell protection) என்று பல உறுதியான அம்சங்களை பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விபரம் இதோ.

வலுவான டிஸ்பிளே (Strong display), உடையாத மற்றும் மிகவும் உறுதியான பாடி கொண்ட ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் தேர்வு நிச்சயமாக ரியல்மி C61 ஸ்மார்ட்போன் சாதனமாக தான் இருக்க வேண்டும். காரணம் இது மிகவும் உறுதியான அம்சங்களுடன் வருகிறது. இந்த புதிய ரியல்மி C61 (Realme C61) ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஜூன் 28, 2024 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Realme புலி தான்.. ரூ. 7000 விலை புது Mobile.. இது வெறும் போனில்லை..

ரியல்மி C61 ஸ்மார்ட்போன் (Realme C61 Smartphone):

இதன் அறிமுகம் வால்மார்ட் (Walmart) நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போதே பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி C61 (Realme C61) ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சில முக்கியமான சிறப்பம்சங்களை பிளிப்கார்ட் நிறுவனம் இப்போதே அதன் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.

வெளிவரவிருக்கும் புதிய ரியல்மி C61 (Realme C61) ஸ்மார்ட்போன் சாதனத்தில் 6.5" இன்ச் அளவு கொண்ட 1600 x 700 ரெசொலூஷன் உடைய HD+ டிஸ்பிளேவை (display) பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் யூனிஸாக் ஸ்பீட்ட்ரம் T612 சிப்செட் (Unisoc Speedtrum T612 chipset) உடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பட்ஜெட் செக்மென்ட்டில் சிறந்த சிப்செட் மாடலாக பார்க்கப்படுகிறது.

இந்த ரியல்மி C61 (Realme C61) ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் (RAM) + 128GB ஸ்டோரேஜ் (Storage) மற்றும் 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடலுடன் வெளிவரும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் 50MP டூயல் கேமராவுடன் AI அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி C61 விலை (Realme C61 Price):

ரியல்மி C61 சாதனம் 5000mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இதில் இன்னும் பல சூப்பர் அம்சங்களை ரியல்மி நிறுவனம் இணைத்து வழங்கவிருப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் விலை இந்தியாவில் ரூ. 7,999 என்ற விலை முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

Best Mobiles in India

English summary
Realme C61 The New Super Strong Smartphone To Launch On June 28 2024 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X