Home
Mobile

அசூர விற்பனை.. வெறும் ரூ.9,999 விலை.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 8ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரியல்மி சி55 (Realme C55) போன் ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023 (Big Billion Days Sale 2023) விற்பனையானது, வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட விற்பனைக்கு முன்பே பல்வேறு மொபைல்களுக்கு மார்கெட்டே வியக்கும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

ரூ.9,999 விலை.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அந்த வரிசையில், ரியல்மி சி55 போன் மிகவும் மலிவான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களும் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த போனின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்துகொள்வோம்.

ரியல்மி சி55 அம்சங்கள் (Realme C55 Specifications): இந்த ரியல்மி போன் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி சி சீரிஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர்ம் மாலி-ஜி52 (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் பிரம்மாண்ட ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுல் ரேம் வருகிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. அதோடு, 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நனோ மற்றும் எஸ்டிகார்டு சிலாட் வருகிறது. ஃபாஸ்ட் சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Fast Side Fingerprint Scanner) இடம்பெற்றுள்ளது.

இந்த ரியல்மி போனில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் வருகிறது. இது நோட்டிபிகேஷன்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்த்தை போலவே இருப்பதால், இது மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த போனில் சன் ஷோவர் (Sun Shower), ரைனி நைட் (Rainy Night) மற்றும் ரைன் ஃபாரஸ்ட் (Rainforest) ஆகிய மூன்று கலர்கள் இருக்கிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.12,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட்டில் ரூ.10,999க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும், பிக் பில்லியன் டேஸ் சேல் வருகை காரணமாக ரூ.1000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை (Axis Bank Credit Card) பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், ரூ.10,450 வரையில் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையையும் கிடைக்கிறது. இப்படி ஏராளமான சலுகையை இந்த ரியல்மி சி55 போன் பெற்று, அசூர விற்பனையில் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C55 With 8GB RAM, 5000mAh Battery Phone Under Rs 10000 Sale on Flipkart With Offer Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X