Home
Mobile

அனல் பறக்குது ஆர்டர்.. வெறும் ரூ.13,299 விலைக்கு 16GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. யாரு விடுவா?

பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் வெறும் ரூ.13,299 விலைக்கு 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, மினி கேப்சூல் பீச்சர் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ரியல்மி சி55 (Realme C55) போன் விற்பனையாகிறது.

ரியல்மி சி55 அம்சங்கள் (Realme C55 Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி-ஜி52 (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.13,299 விலைக்கு 16GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. யாரு விடுவா?

அதோடு ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் வருகிறது. இந்த மாடலில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். அதோடு 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த ரியல்மி சி55 போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி சார்ஜிங் கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டூயல் நனோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டிகார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி சி55 போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில், நைட் மோட் (Night Mode), பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) மற்றும் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. ஃபாஸ்ட் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் அல்ட்ராபூம் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.13,299 விலைக்கு 16GB ரேம்.. 1TB மெமரி.. 64MP கேமரா.. யாரு விடுவா?

அதேபோல, ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் பீச்சரை போலவே இந்த போனில் மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் வருகிறது. இதன்மூலம் சார்ஜிங் ஸ்டேட்டஸ், லோவ் பேட்டரி அலர்ட் மற்றும் டேட்டா யூசேஜ் நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். ஸ்லிம் டிசைனில் பேட்டரியோடு 189 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி சி55 போனில் ரைனி நைட் (Rainy Night), சன் ஷோவர் (Sun Shower) மற்றும் ரைன்ஃபாரஸ்ட் (Rainforest) ஆகிய மூன்று கலர்கள் கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் தள்ளுபடியில் வெறும் ரூ.13,299க்கு கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுகொள்ளலாம். மிகவும் மலிவான விலையில், பிரீமியம் டிசைன், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 64 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற நல்ல அம்சங்களை கொண்ட போன் வேண்டுமானால், இந்த ரியல்மி சி55 மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C55 With 16GB RAM Sale Under Rs 10000 on Flipkart With Discount Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X