Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Realme போன்.! எப்போது அறிமுகம்?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி55 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் மாதம் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.

சமீபத்தில் இந்த ரியல்மி சி55 ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது அதிக வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ரியல்மி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சரி இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Realme போன்.!

எல்சிடி டிஸ்பிளே

ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் ஆனது 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ரியல்மி சி55 ஸ்மார்ட்போனில் கேமிங் சிப்செட் வசதி உள்ளது. அதாவது இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இது கேமிங் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ரய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Realme போன்.!

64எம்பி ரியர் கேமரா வசதியுடன் இந்த ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

புதிய ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி?

ரியல்மி சி55 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் புதிய Realme போன்.!

பட்ஜெட் விலை

4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோபோன், 3.5எம்எம் ஆடியோ ஜாக், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி சி55 ஸ்மார்ட்போன மாடல். மேலும் இந்த புதிய ரியல்மி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C55 smartphone with 64MP rear camera will be launched soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X