ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. 5000எம்ஏஎச் பேட்டரி.. யாரு விடுவா?
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி53 ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் முதலில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வேரியணட் ஒன்று இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது தற்போது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரியல்மி சி53 போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.11,999 விலையில் நாளை ( செப்டம்பர் 20 ) பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்மி சி53 போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.9,999 விலையில், இதன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.10,999-க்கு வாங்க முடியும். மேலும் இப்போது ரியல்மி சி53 போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போன் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாகப் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது, அதேபோல் இந்த டிஸ்பிளேவில் எச்டி பிளஸ் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வரும் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் அம்சங்கள் இருக்கிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
குறிப்பாக இந்த போனில் மெரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் 108எம்பி கேமரா, தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த 4ஜி போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். மேலும் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி நிறுவனம் கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








