Home
Mobile

ஃபயரு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.8300 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை அடிமட்ட பட்ஜெட்டில் கொடுத்து மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி சி53 (Realme C53) போனானது நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கிறது. கேமரா பிரியர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும் மொபைலை பட்ஜெட்டில் கேட்கும் கஸ்டமர்களை இந்த ரியல்மி தட்டித்தூக்கும். இந்த போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி சி53 4ஜி அம்சங்கள் (Realme C53 4G Specifications): இந்த ரியல்மி போனின் கேமரா பீச்சர்கள் பட்டையை கிளப்புகின்றன. 3X இன்-சென்சார் ஜூம் (3X In-sensor Zoom) கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. நைட்போட்டோகிராபிக்காக நைட் மோட் (Night Mode) வருகிறது. மேலும், சீக்ரெட் கார்டன் ஃபில்டர் (Secret Garden Filter) மற்றும் சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர் (City Street Filter) கிடைக்கிறது.

ஃபயரு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.8300 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்..

இதுபோக டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கிறது. இந்த ரியல்மி சி53 போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேக் செய்துள்ளது.

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி யுஐ டி எடிஷன் (Realme UI T Edition) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

இந்த ரியல்மி சி53 போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மியில் 2 கலர்கள் இருக்கின்றன.

ஆகவே, சாம்பியன் கோல்டு (Champion Gold) அல்லது சாம்பியன் பிளாக் (Champion Black) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5000mAh பேட்டரி வந்தாலும், 7.99 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கிடைக்கிறது. அதேபோல வெறும் 186 கிராம் எடை மட்டுமே வருகிறது. இந்த ரியல்மி சி53 போனானது, 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்இடி சப்போர்ட் உள்ளது.

ரியல்மி சி53 பிளிப்கார்ட் விற்பனை (Realme C53 Flipkart Sale): இந்த ரியல்மி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.8,399 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.3,600 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக ரூ.9,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C53 With 108MP Camera Gets 40 Percent Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X