ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.8000 பட்ஜெட்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 18W சார்ஜிங், ஆக்டா கோர் சிப்செட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 7.99 மிமீ ஸ்லிம் டிசைன் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும் ரியல்மி சி53 (Realme C53) போனானது, நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது.
ரூ.10,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ், பெஸ்ட் கேமரா அவுட்புட், பட்டையை கிளப்பும் பேட்டரி பேக்கப் கொண்ட மொபைல் வேண்டுமானால், இந்த மாடல் நல்ல தேர்வாக இருக்கும். இந்த போனின் முழு அம்சங்கள், விலை விவரங்களை இப்போது, பார்ப்போம்.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த ரியல்மியில் ஆக்டா கோர் (Octa-core) சிப்செட் வருகிறது. யுனிசோக் டி612 12என்எம் (UNISOC T612 12nm) சிபியு மற்றும் ஆர்ம் மாலி ஜி57 (ARM Mali-G57) ஜிபியு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS கொண்டுள்ளது.
ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) சப்போர்ட் உள்ளது. 2 ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் (4 ஜிபி + 4 ஜிபி டைனாமிக்) + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + (6 ஜிபி + 6 ஜிபி டைனாமிக்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
2 டிபிக்கான கூடுதல் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) பேனல் வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

108 எம்பி அல்ட்ரா கிளியர் கேமரா (Ultra Clear Camera) + டெப்த் சென்சார் (Depth Sensor) கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3X இன்-சென்சார் ஜூம் சப்ரோர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நைட் மோட், போர்ட்ராய்டு மோட், பொக்கெ எஃபெக்ட் கன்ட்ரோல், எச்டிஆர் பீச்சர்கள் வருகின்றன.
8 எம்பி ஏஐ செல்பீ (AI Selfie) வருகிறது. 720P வீடியோ ரெக்கார்டிங், பொக்கெ எஃபெக்ட் கன்ட்ரோலே, பியூட்டி மோட், போர்ட்ராய்டு மோட் பீச்சர்கள் இருக்கின்றன. இந்த ரியல்மி போனில் 18W குயிக் சார்ஜ் (Quick Charge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதில் 4880mAh கேபாசிட்டி கொண்டிருக்கிறது.
7.99 மிமீ தடிமன் மற்றும் 186 கிராம் எடை வருகிறது. டூயல் நானோ கார்ட் சிலாட் + மைக்ரோ எஸ்டி சிலாட் வருகிறது. அதோடு பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர், 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மட்டுமே வருகிறது.
டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் ஆகிய கலக்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட் போக 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.8,999ஆகவும், 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.10,499ஆகவும் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 4 ஜிபி மாடலுக்கு ரூ.450 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 ஜிபி மாடலுக்கு ரூ.525 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.8,549க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








