அசூர விற்பனை.. வெறும் ரூ.8,664 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
கேமரா பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக 108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ரியல்மி சி53 (Realme C53) போன் வெறும் ரூ.8,664 விலைக்கு கிடைக்கிறது.
ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் ஓஎஸ் (Realme UI T Edition OS) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி+ (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த போனில் பிரம்மாண்ட டூயல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா சென்சார் வருகிறது. இந்த கேமராவில் டைம் லேப்ஸ் (Time Lapse), போர்ட்ராய்ட் (Portrait), எச்டிஆர் (HDR), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), போக்கே எஃபெக்ட் (Bokeh Effect) போன்ற மோட்கள் வருகின்றன. அதோடு 3x ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த ரியல்மி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதோடு 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 4ஜிபி மாடலில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 6ஜிபி மாடலில் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. இந்த ரியல்மி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த பேட்டரியோடு சேர்த்து, இந்த போன் வெறும் 186 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. டூயல் 4ஜி, வை-பை 5, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் அமேசானில் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.9,627ஆக குறைக்கப்பட்டது.

இப்போது, இந்த விலையில் மிரள வைக்கும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.962 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 4 ஜிபி மாடலை வெறும் ரூ.8,664க்கு வாங்கிக்கொள்ள முடியும். இவ்வளவு மலிவான விலையில் 108 எம்பி கேமரா போன் கிடைப்பது, இதுவே முதல்முறையாகும்.


Click it and Unblock the Notifications