பிச்சிக்குது பிளிப்கார்ட்.. ரூ.8549 பட்ஜெட்ல 50MP கேமரா.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல இப்படிவொரு போன் கிடைக்காது என்று சொல்லும் அளவுக்கு 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ரியல்மி சி51 (Realme C51) போன் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core Unisoc T612 12nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) வருகிறது. இந்த ரியல்மி போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவாகும்.
இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி சி51 போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.
இந்த மாடலில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட், பனோராமிக் வியூ, டைம் லேப்ஸ், போர்ட்ராய்டு, ஸ்லோவ் மோஷன் மற்றும் எச்டிஆர் போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல 5 எம்பி செல்பீ கேமராவில் போக்கே எஃபெக்ட் மற்றும் பியூட்டி போன்ற மோட்கள் வருகின்றன.

இந்த போனில் முக்கிய அம்சமாக மினி கேப்சூல் (Mini Capsule) வருகிறது. இதன் மூலம் ஐபோன்களை போலவே நோட்டிபிகேஷன்களை பார்த்துகொள்ளலாம். இந்த மாடலில் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது. அதோடு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.0, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் போன்றவை வருகின்றன. இந்த போனானது, ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைன் பேக் பேனல் கொண்டிருக்கிறது. அதோடு மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த ரியல்மி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.450 தள்ளுபடியுடன் வெறும் ரூ.8,549க்கு கிடைக்கிறது. இதேபோல 108 எம்பி கேமரா கொண்ட ரியல்மி சி53 போனும் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
இருப்பினும், இந்த சி சீரிஸ் போன்கள் 4ஜி மாடல்களாகவே இருப்பதால், அதன் 5ஜி மாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இதனால், இதே அம்சங்களுடன் ரியல்மி சி65 5ஜி மாடலை ரியல்மி நிறுவனம் கம்மி விலையில் களமிறக்க இருக்கிறது. இந்த போன் ஏற்கனவே பிஐஎஸ் சான்றிதழுக்கு வந்துவிட்டது. ஆகவே, அடுத்த சில மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications