பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.8,499க்கு 8GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மலிவான விலையில் 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W சார்ஜிங் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனுடன் விற்பனைக்கு வந்துள்ளது, ரியல்மி சி51 (Realme C51) போன்.
ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த ரியல் போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு எச்டிஆர் (HDR) கேமராவாகும்.

இந்த மெயின் கேமராவில் நைட் மோட் (Night Mode), பனோராமிக் வியூ (Panoramic View), டைம் லேப்ஸ் (Timelapse), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவிலும் பியூட்டி மோட் (Beauty Mode), போக்கே எஃபெக்ட் (Bokeh Effect) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core Unisoc T612 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. ரியல்மி போன்களில் வரும் ரியல்மி யுஐ டி எடிஷன் (Realme UI T Edition) ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையில் எதிர்பார்க்காத வகையில் 2 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கிய அம்சமாக 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன.
அதோடு ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளன. இந்த போனில் மினி கேப்சூல் (Mini Capsule) நோட்டிபிகேஷன் அம்சம் வருகிறது. இந்த அம்சம் ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை போலவே இருக்கிறது.
இந்த போனின் பேக் பேனல் ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைனில் (Stylish Glittering Design) உருவாக்கப்பட்டுள்ளது. கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 11) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (realme.com) ஆகிய தளங்களில் வாங்கிக்கொள்ள முடியும். இந்த போனை ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், ரூ.500 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.8,499க்கு இந்த ரியல்மி சி51 போனை வாங்கிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








