Home
Mobile

தெறிக்குது விற்பனை.. வெறும் ரூ.7,599 விலையில் 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையில் (Realme Festive Days Sale) 50எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட ரியல்மி சி51 (Realme 51) போன் வெறும் ரூ.7,599 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதேபோல பல்வேறு போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி நிறுவனமானது, ரியல்மி சி51, 53 மற்றும் 55 போன்களுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த மூன்று போன்களும் ரூ.10,000 கீழ் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது. இந்த போன்களின் அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.

ரூ.7,599 விலையில் 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specification): இந்த போன் 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 64 ஜிபி மெமரி மற்றும் 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த மாடலில் 33W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை, ரூ.7,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது ரூ.400 தள்ளுபடியுடன் வெறும் ரூ.7,599க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specification): இந்த போனில் 6.74 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

ரூ.7,599 விலையில் 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது.

இந்த போனின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலை ரூ.9,499க்கு வாங்கிக்கொள்ள முடியும். இந்த தள்ளுபடி ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது.

ரியல்மி சி55 அம்சங்கள் (Realme C55 Specification): இந்த போன் 6.72 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சி55 மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.450 ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு தள்ளுபடியும், ரூ.1000 பேஸ்கட் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும், ரூ.8,549க்கு வாங்கிக் கொள்ள முடியும். இந்த டிஸ்கவுண்ட் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Realme C51 With 50MP Camera Under Rs 10000 on Festive Days Sale in Flipkart Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X