Home
Mobile

தீப்பறக்கும் விற்பனை.. ரூ.8,499க்கு ரியல்மி போன்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான கம்மி விலையில், 8 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், மினி கேப்சூல் நோட்டிபிகேஷனோடு ரியல்மி சி51 (Realme C51) விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த ரியல்மி மாடலில் 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.8,499க்கு ரியல்மி போன்.. 8GB ரேம்.. 50MP கேமரா வேற!

இந்த போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் (Realme UI T Edition) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core Unisoc T612 12nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி போர்ட் வருகிறது.

இந்த ரியல்மி சி51 போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. இந்த மெயின் கேமராவில் நைட் மோட் (Night Mode), பனோராமிக் வியூ (Panoramic view), டைம் லேப்ஸ் (Timelapse), போர்ட்ராய்டு (Portrait Mode), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் எச்டிஆர் (HDR) ஆகிய மோட்கள் வருகின்றன.

5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல் (Bokeh Effect Control), பியூட்டி மோட் (Beauty Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட்கள் வருகின்றன. இந்த போனில் பெரிதும் பேசப்படும் அம்சமாக 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

ஐபோன்களில் வரும் மினி கேப்சூல் (Mini Capsule) என்னும் டைனாமிக் நோட்டிபிகேஷன் (Dynamic Notifications) அம்சம் இந்த போனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் பேக் பேனல் ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைனில் (Stylish Glittering Design) வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதோடு ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ரியல்மி சி51 போன் மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 4) முதல் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (realme.com) மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ள முடியும். இந்த போனின் எர்லி பேர்ட் (Early Bird) விற்பனை இன்று மாலை 6 மணி முதல் தொடங்குகிறது. இந்த போனை ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால், ரூ.500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.8,499க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C51 with 50MP Camera, 5000mAh Battery Available on Flipkart Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X