Home
Mobile

கொத்தா தூக்குவீங்க.. ரூ.10,430 க்கு புதிய ரியல்மி போன்.. 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி51 (Realme C51) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன் ஆனது பட்ஜெட் விலையில் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆனாலும் இந்தோனேசியா மற்றும் சில நாடுகளில் இந்த ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் செப்டம்பர் 4 2023 அன்று மதியம் 12 மணி அளவில் ரியல்மி சமூக வலைத்தளத்தில் இந்த ரியல்மி சி51 போன் அறிமுகாகும். மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி சி51 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொத்தா தூக்குவீங்க.. ரூ.10,430 க்கு புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்?

அதாவது ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 560 nits brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

யுனிசாக் டி612 ஆக்டோ-கோர் 12 என்எம் பிராசஸர் (UNISOC T612 Octa-Core 12nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியலமி சி51 போன். அதேபோல் மாலி-ஜி57 ஜிபியு ( Mali-G57 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது. நோக்கியா போன்களில் கூட இதுபோன்ற யுனிசாக் பிராசஸர் வசதி தான் அதிகம் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (3W SueprVOOC fast charging) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த ரியல்மி போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

கொத்தா தூக்குவீங்க.. ரூ.10,430 க்கு புதிய ரியல்மி போன்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

க்ரீன் மற்றும் கார்பன் பிளாக் நிறத்தில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய ரியல்மி போன் ஆனது ரூ.10,430 பட்ஜெட்டில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக ஒரு நல்ல 4ஜி போனை வாங்க விரும்பும் பயனர்களை இதை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C51 will be launched in India on September 4: Check Specifications Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X