Home
Mobile

இவ்ளோ தானா? அப்போ 2 போன் வாங்கலாமே.. கம்மி விலையில் ரியல்மி போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் கடந்த சில வாரங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் மேலும் ஒரு போனை கொண்டுவர உள்ளது ரியல்மி நிறுவனம். அதாவது செப்டம்பர் 4-ம் தேதி ரியல்மி சி51 போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம்.

தற்போது வெளியான தகவலின்படி, இந்த ரியல்மி சி51 போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தான் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனின் விற்பனை தேதி மற்றும் முன்பதிவு தேதியை வெளியிடவில்லை ரியல்மி நிறுவனம். அதேபோல் இது 5ஜி போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 போன் அறிமுகமாகும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ரியல்மி சி51 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

கம்மி விலையில்  ரியல்மி போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 560 nits brightness), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (180Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

யுனிசாக் டி612 ஆக்டோ-கோர் 12 என்எம் பிராசஸர் (UNISOC T612 Octa-Core 12nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியலமி சி51 போன். அதேபோல் மாலி-ஜி57 ஜிபியு ( Mali-G57 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இந்த யுனிசாக் பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவடன் இந்த போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் 5எம்பி செல்பி கேமராவு பதிலாக 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது ரியல்மி சி51 ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்மி விலையில்  ரியல்மி போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் க்ரீன் மற்றும் கார்பன் பிளாக் கலர்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே வெளியான தகவலின்படி, ரூ.10,499-விலையில் ரியல்மி சி51 போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் வங்கி சலுகைகளுடன் சேர்த்து இந்த புதிய ரியல்மி போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

ரியல்மி நிறுவனம் வரும் மாதங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்கிறது ரியல்மி நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C51 to be launched on September 4: check specifications, price, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X