போடு சக்கை.. மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.8,499 போதும்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே திரும்பி பார்க்கும் விலையில் எச்டி டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 8ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வியக்க வைக்கும் அம்சங்களுடன் வெளியான ரியல்மி சி51 (Realme C51) போனின் ஸ்பெஷல் சேல் இன்று தொடங்குகிறது.
ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core Unisoc T612 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ரியல்மி யுஐ டி எடிஷன் (Realme UI T Edition) ஓஎஸ் மற்றும் மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் பனோராமிக் வியூ (Panoramic View), நைட் மோட் (Night Mode), டைம் லேப்ஸ் (Timelapse), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), போர்ட்ராய்டு (Portrait Mode) ஆகியவை வருகின்றன. அதோடு எச்டிஆர் (HDR) சப்போர்ட்டும் வருகிறது.
அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த செல்பீ கேமராவில் பியூட்டி மோட் (Beauty Mode) மற்றும் போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல் (Bokeh Effect Control) போன்ற பிரத்யேக அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
அதோடு 2 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் எதிர்பார்த்திராத வகையில், 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பெரிதும் பேசப்படும் விதமாக மினி கேப்சூல் (Mini Capsule) என்னும் டைனாமிக் நோட்டிபிகேஷன் (Dynamic Notifications) அம்சம் வருகிறது.
இந்த அம்சம் ஐபோன்களில் மிகவும் பெயர்பெற்ற அம்சமாகும். சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) வை-பை 802 (Wi-Fi 802) ஆகியவை வருகின்றன.
இந்த போனின் பேக் பேனலானது, ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைன் (Stylish Glittering Design) கொண்டுள்ளது. அதோடு கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ரியல்மி சி51 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் செப்டம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
அன்றே பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி.காம் (realme.com) தளங்களில் எர்லி பேர்ட் (Early Bird) விற்பனை நடந்தது. சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நடந்ததால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களால் போனை ஆர்டர் செய்ய முடியவில்லை. இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 7) மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்பெஷல் சேல் நடக்கிறது.
இந்த விற்பனையின் போது, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.8,499க்கு இந்த ரியல்மி சி51 போனை வாங்கிக்கொள்ளலாம். இந்த போனின் சாதாரண விற்பனை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது. இன்று, இந்த போனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications