யோசிக்காம வாங்குவீங்க.. ரூ.10000 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் மலிவு விலை போன்களுக்கே கிராக்கி வந்துவிடும் வகையில், ரியல்மி சி51 (Realme C51) போனின் அம்சங்களும், விலையும் இருக்கிறது. வெறும் ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி என்று வியப்படைய வைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின், ரியல்மி சி53 போன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 108 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி, யுனிசோக் டி612 சிப்செட் என்று மிட்-ரேன்ஞ் அம்சங்களுடன் அறிமுகமானது. இந்த போனின் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்தது.

இப்போது, இந்த போனின் விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த போன் மிகப்பெரும் வரவேற்பினை பெற்றதால், ரியல்மி நிறுவனம் அதே பட்ஜெட்டில் மற்றொரு போனை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இது ரியல்மி சி51 என்று தகவல்கள் கசிந்துவந்த நிலையில், இப்போது அந்த போனின் முக்கிய அம்சங்கள் வெளியாகியிருக்கின்றன.
ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த போனின் ரேம், ஸ்டோரேஜ், கேமரா, டிஸ்பிளே, கலர்கள் மற்றும் பேட்டரி குறித்த விவரங்கள் இப்போது கசிந்துள்ளன. அதனடிப்படையில் இந்த போன் 8 ஜிபி ரேம் + 63 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.
பிளாக் (Black) மற்றும் லைட் ப்ளூ (Light Blue) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் வருகிறது. குறிப்பாக, ஆப்பிள் போன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே இந்த போனின் டிஸ்பிளேவில் மினி கேப்சூல் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, போனுக்கு வரும் நோட்டிபிக்கேஷன்களை மினி கேப்சூல் மூலம் பார்த்துக்கொள்ள முடியும். இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்கள் ரியல்மி சி53 போனில் கொடுக்கப்பட்டதை போலவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, அந்த போனின் அம்சங்களை இப்போது தெரிந்துகொள்வது நல்லது.
இந்த ரியல்மி சி53 போன், 6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட யுனிசோக் டி612 (Unisoc T612) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்ட் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.10,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, ரியல்மி சி51 போனும் அதே பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொழில்நுட்பம் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








