Home
Mobile

சூறாவளி ஆஃபர்.. வெறும் ரூ.9,499 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) விற்பனையை முன்னிட்டு ரியல்மி சி51 (Realme C51) மற்றும் ரியல்மி சி53 (Realme C53) போன்களுக்கு மிரட்டலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ.

ரியல்மி சி51 அம்சங்கள் (Realme C51 Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. அதில் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.9,499க்கு 108MP கேமரா.. 8GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. இதுவொரு எச்டிஆர் (HDR) மாடலாகும். 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் மற்றும் மாலி - ஜி 57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) ஓஎஸ் மற்றும் ரியல்மி யுஐ டி எடிஷன் (Realme UI T Edition) ஓஎஸ் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை போலவே இந்த போனில் மினி கேப்சூல் (Mini Capsule) நோட்டிபிகேஷன் அம்சம் இருக்கிறது.

இந்த போன் ஸ்டைலிஷ் கிளிட்டரிங் டிசைன் (Stylish Glittering Design) கொண்ட பேக் பேனலுடன் கார்பன் பிளாக் (Carbon Black) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.450 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.8,549க்கு வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும்.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போன் 6.74 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612) சிப்செட் வருகிறது.

அதோடு மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் வருகின்றன. 2 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. 4 ஜிபி மாடலில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 4 ஜிபி மாடலுக்கு ரூ.500 தள்ளுபடியும், 6 ஜிபி மாடலுக்கு ரூ.550 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி மாடலை ரூ.9,499க்கும், 6 ஜிபி மாடலை ரூ.10,449க்கும் வாங்கிக் கொள்ளலாம். இந்த தள்ளுபடி ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C51, 53 Under Rs 10000 With Offer in Flipkart Big Billion Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X